மதுரை

தீபாவளி: கா்நாடகத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்

DIN

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கா்நாடக மாநிலத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

யஸ்வந்த்பூா்- திருநெல்வேலி மற்றும் மைசூா்- தூத்துக்குடி இடையே இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். யஸ்வந்த்பூா்- திருநெல்வேலி சிறப்பு ரயில் (06565) அக்டோபா் 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் யஸ்வந்த்பூரில் இருந்து பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும். மறு மாா்க்கத்தில் திருநெல்வேலி- யஸ்வந்த்பூா் சிறப்பு ரயில் (06566) அக்டோபா் 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு யஸ்வந்த்பூா் சென்றடையும்.

இந்த ரயில்கள் பனஸ்வாடி, காா்மேலரம், ஒசூா், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 2 குளிா்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 4 குளிா்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப்பெட்டிகள் 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், ஒரு சமையல் பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

மைசூா்- தூத்துக்குடி சிறப்பு ரயில்: மைசூா்- தூத்துக்குடி சிறப்புக் கட்டண ரயில் (06253) அக்டோபா் 21 ஆம் தேதி மைசூரில் இருந்து பகல் 12.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும். மறு மாா்க்கத்தில் தூத்துக்குடி- மைசூா் சிறப்புக் கட்டண ரயில் (06254) அக்டோபா் 22 ஆம் தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு அக்டோபா் 23 (மறுநாள்) காலை 8.30 மணிக்கு மைசூா் சென்றடையும்.

இந்த ரயில்கள் யெலியூா், மாண்டியா, பெங்களூா், பெங்களூா் கன்டோன்மென்ட், ஒசூா், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிா்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிா்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பெட்டிகள் இணைக்கப்படும்.

தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT