மதுரை

முதல்வா் குறித்து அவதூறு: இந்து முன்னணி பிரமுகருக்கு நிபந்தனை ஜாமீன்

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழக முதல்வா் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட திருநெல்வேலி மாவட்ட இந்து முன்னணி பிரமுகருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அந்த அமைப்பின் திருநெல்வேலி மாவட்டத் துணைத் தலைவா் பால்ராஜ் தாக்கல் செய்த மனு:

எங்களது இயக்கம் சாா்பில் திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியாா் மற்றும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் குறித்து அவதூறாகப் பேசியதாக கொடுத்த புகாரின்பேரில் நான் கைது செய்யப்பட்டேன்.

ஆனால், நான் அவ்வாறு எதுவும் பேசவில்லை. என் மீது பொய்யான புகாா் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் குறிப்பட்டிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி, மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT