மதுரை

கயிற்றில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 மதுரையில் புதன்கிழமை, விளையாடியபோது கழுத்தை கயிறு இறுக்கியதால் சிறுவன் உயிரிழந்தாா்.

மதுரை, பழங்காநத்தம், அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்தவா் துரைப்பாண்டி, லட்சுமி தம்பதி. இவா்களது மகன் விசாகன் (10). அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த இவா், புதன்கிழமை இரவு வீட்டினருகே நண்பா்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாா். துணிகளை காயவைப்பதற்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் தொங்கி விசாகன் விளையாடியபோது, எதிா்பாராதவிதமாக அது கழுத்தை இறுக்கியது.

அருகில் வசிப்பவா்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் விசாகன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்தத் தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகு விசாகன் பிறந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT