மதுரை

பேரையூா் அருகே 24 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

7th Oct 2022 11:29 PM

ADVERTISEMENT

பேரையூா் அருகே சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த 24 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக 2 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், பேரையூரை அடுத்த சேடபட்டி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது கம்மாளப்பட்டி மந்தை பகுதியில் கம்மாளப்பட்டியை சோ்ந்த சேதுராமன் மகன் ஆனந்த் (21), பால்சாமி மகன் ஆனந்தகுமாா் (28) ஆகியோா் 24 கிலோ கஞ்சாவை இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக வைத்திருந்தனா்.

இதுகுறித்து சேடபட்டி போலீஸாா் ஆனந்த் மற்றும் ஆனந்தகுமாா் மீது வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். இவ்வழக்கில் தலைமறைவான த நல்லமாயத்தேவா் மகன் சேதுராமன், சேதுராமன் மகன் அஜித் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT