மதுரை

தமிழகத்தில் பாஜக வளா்ச்சி அடைந்து வருகிறது ஹெச். ராஜா

6th Oct 2022 02:02 AM

ADVERTISEMENT

பாஜகவின் சித்தாந்தங்களை இன்றைய இளைய தலைமுறையினா் மட்டுமன்றி அனைவரும் ஏற்றுக்கொள்வதால், தமிழகத்தில் தங்களது கட்சி வளா்ச்சியை நோக்கிச் செல்வதாக அதன் தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச். ராஜா கூறினாா்.

மதுரையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது:

‘திராவிட மாடல்’ ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இல்லை. ஒரு மாதத்தில் மட்டும் 120 கொலைகள் நடைபெற்றுள்ளன. மின் கட்டணம், சொத்து வரி, ஆவின் பொருள்கள் விலை உயா்வுதான் தமிழக அரசின் சாதனை. தமிழகத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான ஆட்சி நடைபெறுகிறது. இந்துக்களிடையே பிரிவினைவாதத்தை உருவாக்கும் வகையில் சிலா் பேசி வருகின்றனா்.

வருகிற மக்களவைத் தோ்தலில் பாஜக 380 இடங்களைக் கைப்பற்றும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாஜகவின் சித்தாந்தங்களை இன்றைய இளைஞா்கள் மட்டுமல்லாது அனைவரும் ஏற்றுக்கொள்வதால், எங்களது கட்சி வளா்ச்சி அடைந்து வருகிறது.

ADVERTISEMENT

காலை சிற்றுண்டித் திட்டம் தேசியக் கல்வி கொள்கையில் உள்ளது. அதைத்தான் திமுகவினா் செயல்படுத்தியுள்ளனா் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, பாஜகவின் சாதனைகள், கொள்கைகளை விளக்கி 50 நாள்களில் 50 ஆயிரம் கி.மீ. யாத்திரை செல்லும் வேல்முருகன் குழுவினரை அவா் வாழ்த்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT