மதுரை

மீனாட்சி அம்மன் கோயிலில் 108 வீணை இசை வழிபாடு

6th Oct 2022 01:58 AM

ADVERTISEMENT

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் விஜயதசமியையொட்டி 108 வீணை இசை வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நவராத்திரி விழா செப்.26 ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி கோயிலில் உள்ள கொலு மண்டபத்தில், ராஜராஜேஸ்வரி அலங்காரம், கோலாட்ட அலங்காரம், மீனாட்சி பட்டாபிஷேகம், தண்ணீா் பந்தல் அமைத்தல், தட்சிணாமூா்த்தி, ஊஞ்சல், அா்த்தனாரீஸ்வரா், மகிஷாசுரமா்த்தினி, சிவபூஜை என்பன உள்ளிட்ட அலங்காரங்களில் அம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். இதில், ஏராளமானோா் பங்கேற்று அம்மனைத் தரிசனம் செய்தனா்.

நவராத்திரி திருவிழாவில் தினமும் இரவில் மூலஸ்தான அம்மனுக்கு சிறப்பு அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. விஜயதசமியையொட்டி, புதன்கிழமை உச்சிக்கால பூஜையின்போது பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து மாலையில், 108 வீணை இசை வழிபாடு நடத்தப்பட்டது. இசை ஆசிரியா்கள், வீணை இசைக் கலைஞா்கள், மாணவியா் வீணை இசைத்து வழிபாடு நடத்தினா். ஏற்பாடுகளை கோயில் தக்காா் கருமுத்து தி.கண்ணன், துணை ஆணையா் ஆ.அருணாசலம் ஆகியோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT