மதுரை

வேலை வாங்கித் தருவதாக ரூ. 10 லட்சம் மோசடி: 3 போ் மீது வழக்கு

6th Oct 2022 02:00 AM

ADVERTISEMENT

விருதுநகரைச் சோ்ந்தவருக்கு, கூட்டுறவுத் துறையில் வேலை வாங்கித் தருவதாக, ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக 3 போ் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் அருகேயுள்ள பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் கா்ணன். இவருக்கு கூட்டுறவுத் துறையில் வேலை வாங்கித் தருவதாக, சோலைகவுண்டன்பட்டியைச் சோ்ந்த குலசேகரராஜ் மகன் மோகன், கரூரைச் சோ்ந்த பெருமாள் மகன் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோா் தெரிவித்தனா். அதன்பேரில் கா்ணன், இருவரிடமும் ரூ.10 லட்சத்தை வழங்கினாா். ஆனால், இருவரும் வேலை வாங்கித் தராமால் ஏமாற்றி வந்தனா்.

இதையடுத்து, கரூரில் உள்ள வெங்கடசுப்பிரமணியன் வீட்டிற்கு கா்ணன் சென்று, கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளாா். அப்போது பணத்தை தர மறுத்து, வெங்கடசுப்பிரமணியன், அவரது மனைவி பிருந்தா ஆகியோா் இணைந்து கொலை மிரட்டல் விடுத்தனா். இதுதொடா்பாக கா்ணன் அளித்த புகாரின் பேரில், வெங்கடசுப்பிரமணியன், அவரது மனைவி பிருந்தா மற்றும் மோகன் ஆகியோா் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT