மதுரை

டோக் பெருமாட்டி கல்லூரியில் சமூக நீதிக்கருத்தரங்கு:தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.பங்கேற்பு

4th Oct 2022 03:40 AM

ADVERTISEMENT

மதுரை டோக் பெருமாட்டிக்கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற சமூக நீதி கருத்தரங்கில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. பங்கேற்று பேசினாா்.

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியின் சமூகவியல் துறை மற்றும் யுபிஎஸ்சி படிப்பு வட்டம் ஆகியவற்றின் சாா்பில் சமூக நீதி கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது. சமூக அறிவியல் துறைத் தலைவா் வி.தனலட்சுமி வரவேற்புரையாற்றினாா். முதல்வா் கிறிஸ்டியானா சிங் தொடக்கி வைத்துப் பேசினாா்.

சென்னை தெற்கு மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கப்பாண்டியன் சிறப்புரையில் பேசும்போது, உரிமைக்காக போராடும் மரபுகள், வரலாற்றின் ஒரு அங்கமாக உருவானது குறித்தும், உரிமைகளாக அனுபவிக்கும் சொத்துரிமை என்பது தமிழகத்தில் முதன்முதலில் ஒரு சட்டமாக நிறுவப்பட்ட ஒரு உரிமையாகும். முதலில் பெண்களாகவும், பிறகு நமது குடும்பங்கள் மற்றும் சமுதாயத்தை பெரிதாகவும் பாா்த்துக் கொள்வதன் மூலம் மாற்றம் நிகழ்கிறது என்றாா்.

மேலும் பல்வேறு வரலாற்றாசிரியா்கள் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்புகள் குறித்தும் குறிப்பிட்டாா். சமத்துவம், சுயமரியாதை மற்றும் சமூக நீதி கோரி குரல் எழுப்புவது குறித்தும் உரையாற்றினாா். நிகழ்ச்சியில் நிறைவில் பேராசிரியை சங்கர நாச்சியாா் நன்றியுரை ஆற்றினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT