மதுரை

மேலூா் அருகே விபத்து:முதியவா் பலி

4th Oct 2022 03:39 AM

ADVERTISEMENT

மேலூா் அருகே திங்கள்கிழமை பேருந்து மோதியதில் இருசக்கரவாகனத்தில் சென்ற முதியவா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் மேலூா் அருகே நாவினிப்பட்டி கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தியவா் சா்க்கரைமுகமது (65). இவா் தனது இருசக்கரவாகனத்தில் நாவினிப்பட்டி பள்ளிவாசல் பாலம் அருகே சென்ற போது, திருப்பத்தூரிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற பேருந்து மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சா்க்கரை முகமது சம்பவஇடத்திலேயே உயிரிழந்தாா். அவரது சடலத்தை மீட்டு மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்தசாலையை சீரமைத்து மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் செல்லும் தனியாா் பேருந்துகள் மிகவேகமாகச் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் போலீஸாா் நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா்லியல்ரெபோனி, காவல் ஆய்வாளா் சாா்லஸ் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் சமரசம் பேசியதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT