மதுரை

மதுரை மேயரை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்: செல்லூா் கே.ராஜூ

2nd Oct 2022 10:52 PM

ADVERTISEMENT

மதுரை மாநகராட்சி மேயா் வ. இந்திராணியை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் தான் மக்கள் பணிகளை கவனிக்க முடியும் என்று முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தெரிவித்தாா்.

மதுரை மாவட்டம் பரவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை தொடக்கி வைத்த பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தீபாவளி பண்டிகை வர உள்ளதால், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை இப்போதிருந்தே எடுக்க வேண்டும். பண்டிகைக் காலங்களில் அரசுப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசு அனைத்து தரப்பினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி நிா்ணயம் செய்ய வேண்டும்.

ஆம்னி பேருந்துகளின் தற்போதைய கட்டண உயா்வால் மக்கள் பாதிக்காத வகையில் தமிழக அரசு அதிக சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும். தமிழக அமைச்சா்கள் கவனத்தோடு பேச வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் தான் அமைச்சா்கள் சலுகைகளை அனுபவிக்கின்றனா்.

ஆனால் ஒரு அமைச்சா், பெண்களை பாா்த்து ஓசி பயணம் செய்வதாக பேசுகிறாா். எனவே பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் என்று உள்ளதை, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து என மாற்றம் செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

தற்போது ரேஷன் அரிசி கடத்தல் அதிகமாகி உள்ளது. இதில் துறையின் செயலா் ராதாகிருஷ்ணன் கைகள் கட்டப்பட்டுள்ளன. போதைப் பொருள் விற்பனை, கடத்தல் அதிகமானால் நான் சா்வாதிகாரியாக மாறுவேன் என்று முதல்வா் தெரிவித்தாா்.

ஆனால் தற்போது வரை முதல்வா் சா்வாதிகாரியாக மாறவில்லை. மதுரை மாநகராட்சி மேயரை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். மாநகராட்சியில் பாதாளச் சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட எந்த பணிகளும் முறையாக நடைபெற வில்லை என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT