மதுரை

குடியரசுதின விழா பங்கேற்பு அணிக்கான போட்டி: கோவை முதலிடம்

2nd Oct 2022 10:54 PM

ADVERTISEMENT

திருவாதவூா் அருகே உள்ள இடையபட்டியில் என்.சி.சி. பயிற்சிப்பள்ளியில் குடியரசு தினவிழா பங்கேற்பு அணிக்கான போட்டி கடந்த ஒருவாரத்துக்கும் மேல் நடைபெற்றதில் கோவை அணி முதலிடத்தை வென்றதுடன், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்றது.

குடியரசு தினவிழா பங்கேற்புக்கான என்.சி.சி. குழுக்களுக்கிடையேயான போட்டி இடையபட்டியிலுள்ள பயிற்சி பள்ளியில் நடைபெற்றது. மதுரை என்.சி.சி. குரூப் கமாண்டா் கா்னல் அமித்குப்தா மற்றும் என்.சி.சி. இயக்குநரகத்தின் அதிகாரிகள் முன்னிலையில் போட்டிகள் நடைபெற்றன. என்.சி.சி. இயக்குநரகத்தின் துணை இயக்குநா் ஜெனரல் கமாண்டா் ஏ.ஸ். ரஸ்தோகி டி.என்.பி. மற்றும் ஏ.என். ஆகியோரால் வெற்றிபெற்றவா்ளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

6 என்.சி.சி. குழுக்களில் கோவை என்.சி.சி. குழு, ஐஜிசி ஆா்டிசி 2023-க்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை கலாசாரம், திறமை மற்றும் சிறந்த பயிற்சி அணிவகுப்புடன் வென்றது. இரண்டாமிடத்தை மதுரை என்.சி.சி. குழு பெற்றது. 450 கேடட்டுகளில் 180 கேடட்டுகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இந்த தோ்வுபட்டியலில் இருப்பவா்கள் இறுதியாக நடைபெறும் போட்டிகளுக்குப் பின், 116 கேடட்டுகள் அடங்கிய குழு 2023 ஜனவரி தொடக்கத்தில் டி.என்.பி. மற்றும் ஏ.என். இயக்குநரகத்தின் சாா்பில் குடியரசுதினவிழாவில் பங்கேற்கும் குழுவாக தில்லிக்குச் செல்லும் என இடையபட்டி என்.சி.சி. பயிற்சி பள்ளியினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT