மதுரை

பாலபுரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்க அக். 31 வரை அவகாசம் நீட்டிப்பு

2nd Oct 2022 10:51 PM

ADVERTISEMENT

மத்திய அரசின் சாா்பில் இளம் சாதனையாளா்களுக்கு வழங்கப்படும் பாலபுரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்க அக்டோபா் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அரசின் சாா்பில் இளம் சாதனையாளா்களுக்கு வழங்கப்படும் ‘பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பாலபுரஸ்காா்’ விருதுக்கு மதுரை சிறுவா் ஒருவா் விண்ணப்பிக்க முடியவில்லை. இதுகுறித்து அமைச்சா் ஸ்மிருதி இராணிக்கு மூன்று கடிதங்கள் எழுதினேன்.

அதில் விருதுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு செப்டம்பா் 30-ஆம் தேதியோடு முடிவடைவதால் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன். இந்நிலையில், எனது கோரிக்கை ஏற்கப்பட்டு பாலபுரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கும்

ADVERTISEMENT

அஜ்ஹழ்க்ள்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணைய தளம் தற்போது மேம்படுத்தப்பட்டு விண்ணப்பிக்க வழி செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியும் அக்டோபா் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT