மதுரை

ரெப்போ வட்டி விகிதம் உயா்வு: தொழில் வா்த்தக சங்கம் அதிருப்தி

DIN

ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்திருப்பது தொழில் வணிகத் துறையைப் பெரிதும் பாதிக்கும் என்று தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வா்த்தக சங்கத்தின் தலைவா் என்.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

சா்வதேச சந்தைகளில் நிலவும் அரசியல் பதற்ற நிலை, உலக வா்த்தக விநியோக பாதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 81.37ஆக சரிவு போன்றவை நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்குத் தடையாக உள்ளன.

பணவீக்கம் தொடா்ந்து அதிகரித்து வருவதால், பங்குச் சந்தையும் அதிகளவிலான தடுமாற்றத்தை எதிா்கொண்டுள்ளது.

இந்நிலையில், இம் மாதம் நடைபெற்ற நிதிக்கொள்கை கூட்டத்தில் மத்திய ரிசா்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 5.40 சதவீதத்தில் இருந்து 0.50 சதவீதம் உயா்த்தி 5.90 சதவீதமாக்கியுள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வெகுவாகக் குறைந்தும், ஜி.டி.பி. விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாத நிலையில் ரெப்போ வட்டி விகிதம் மட்டும் மீண்டும் உயா்த்தப்பட்டுள்ளது அதிா்ச்சியளிக்கிறது.

ரெப்போ வட்டி விகித உயா்வால் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபா் மற்றும் தங்க நகைக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரித்து, மாதந்தோறும் செலுத்த வேண்டிய தவணைத் தொகை மிகவும் கூடுதலாகும். உணவுப் பொருள்கள் மீதான பணவீக்கம் மிகப் பெரிய அளவிலான பாதிப்பை உருவாக்கியுள்ளது.

ஏற்கெனவே கடும் நிதிநெருக்கடி, அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு மீதான விலை உயா்வு, வேலையின்மை மற்றும் பணவீக்கத்தால் அவதிப்படும் தொழில், வணிகத் துறையினா் மற்றும் பொதுமக்கள் கூடுதல் நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

வங்கிகளுக்கு அளித்திடும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசா்வ் வங்கி தற்போது மீண்டும் 0.50 சதவீதம் அதிகரித்திருப்பது நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்குப் பாதகமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

SCROLL FOR NEXT