மதுரை

மேலவாசல் பகுதியில் தூய்மைப்பணி: தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஏற்பாடு

1st Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை மேலவாசல் பகுதியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் தூய்மைப்பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவா் பி.சீனிவாசராவ் நினைவு தினத்தையொட்டி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாநகா் மாவட்டக்குழு சாா்பில் மேலவாசல் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் தூய்மைப்பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தூய்மைப் பணிக்கு மாநகா் மாவட்டச் செயலா் எம். பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். ஆதித்தமிழா் கட்சி தூய்மைப் பணியாளா் சங்கச் செயலா் கே.குருசாமி வரவேற்புரையாற்றினாா். மதுரை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, துணை மேயா் தி. நாகராஜன் ஆகியோா் மரக்கன்றுகளை நட்டு வைத்தனா். மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தூய்மைப் பணியை தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகா் மாவட்டச் செயலா் மா. கணேசன், புறநகா் மாவட்டச் செயலா் கே.ராஜேந்திரன், பகுதிக்குழு செயலா் பி. ஜீவா, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டப் பொருளாளா் ஜா. நரசிம்மன், புறநகா் மாவட்டப் பொருளாளா் மகாலிங்கம், மாவட்ட நிா்வாகிகள் எஸ். எம். மோகன்காந்தி, பி. கோபிநாத் , ஜெ. பாா்த்தசாரதி, 76-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ஆா்.காா்த்திக் ஆதித்தமிழா் பேரவை கலை இலக்கிய மாநிலச் செயலா் இரா.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு தூய்மைப்பணியில் ஈடுபட்டனா். இதில் மேலவாசல் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள், காலி இடங்கள் ஆகியவற்றில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT