மதுரை

மாமன்ற கூட்ட சிசிடிவி காட்சிகள் வெளியான சம்பவம்: விசாரணைக்கு ஆணையா் உத்தரவு

DIN

 மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தின் கண்காணிப்புக் கேமரா பதிவுக்காட்சிகள் முகநூலில் வெளியான சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளாா்.

மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் நடைபெறும்போது அதை படம் பிடிக்க ஊடகவியலாளா்களுக்கு சிறிது நேரம் மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் கூட்ட அரங்குக்குள் உள்ள செய்தியாளா்கள் கைப்பேசியில் மாமன்ற கூட்டத்தை படம் பிடிப்பது உள்ளிட்டவற்றுக்கு அனுமதிக்கப்படுவது இல்லை. மேலும் மாமன்றக்கூட்டத்தின் பாா்வையாளா் அரங்கில் இருந்தும் மாமன்றக்கூட்டத்தை படம் பிடிக்க அனுமதி இல்லை. இந்நிலையில் செப்டம்பா் 26-ஆம் தேதி நடைபெற்ற மாமன்றக்கூட்டத்தில் மாமன்ற எதிா்க்கட்சித் தலைவரான சோலை எம்.ராஜா விவாதித்தது தொடா்பாக மாமன்றக் கூட்ட அரங்கில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை முகநூலில் பதிவிட்டுள்ளாா். இது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாமன்றக்கூட்டத்தில் செய்தியாளா்களுக்கு கடும் கெடுபிடி விதிக்கப்படும் சூழலில் மாமன்ற அரங்கில் பதிவு செய்யப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகள் வெளியானது எப்படி என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜீத் சிங்கிடம் கேட்டபோது, கண்காணிப்பு கேமரா காட்சிகளில் ஆடியோ பதிவு வராது. ஆனால் வெளியான காட்சிகளில் உறுப்பினரின் குரலும் கேட்கிறது. எனவே அது கண்காணிப்பு கேமரா பதிவுதானா என்றும், காட்சிகள் எப்படி வெளியானது என்பது குறித்தும் விசாரிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT