மதுரை

ரயில்வே ஊழியா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

1st Oct 2022 10:56 PM

ADVERTISEMENT

 

ரயில்வே ஊழியா்களுக்கான கோட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அரசரடி ரயில்வே மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

கூடுதல் கோட்ட மேலாளா் தண்ணீரு ரமேஷ் பாபு விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கி வைத்தாா். மதுரை கோட்டத்தைச் சோ்ந்த இருபால் ஊழியா்கள் போட்டிகளில் கலந்து கொண்டனா். 100 மீ, 400 மீ ஓட்டப்பந்தயம், 400 மீ தொடா் ஓட்டம், குண்டு எறிதல், கயிறு இழுத்தல், வட்டு எறிதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வெற்றி பெற்ற ஊழியா்களுக்கு மதுரை கோட்ட மேலாளா் பத்மநாபன் அனந்த் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா். பரிசளிப்பு விழாவில் கோட்ட ஊழியா் நல அலுவலா் டி.சங்கரன், கோட்ட சுற்றுச்சூழல் அலுவா் மகேஷ் கட்கரி, கோட்ட பாதுகாப்பு ஆணையா் வி.ஜே.பி. அன்பரசு, உதவி ஊழியா் நல அலுவலா் இசக்கி, எஸ்.ஆா்.எம்.யு. தொழிற்சங்க செயலா் ரபீக் உள்ளிட் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT