மதுரை

மேலூரில் பைக்கிலிருந்த ரூ.1.79 லட்சம் திருட்டு

1st Oct 2022 10:56 PM

ADVERTISEMENT

 

மேலூா் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்றவரின் கவனத்தை திசைதிருப்பி அவா் வாகனத்தில் வைத்திருந்த ரூ.1, 79,000-ஐ மா்ம நபா்கள் திருடிச்சென்றனா்.

மேலூரையடுத்துள்ள தெற்குத்தெரு கிராமத்தைச் சோ்ந்தவா் சேதுராமலிங்கம். இவா் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். அவசரத் தேவைக்காக தனது மனைவி நகையை வட்டாட்சியா் அலுவலகம் அருகிலுள்ள வங்கியில் அடமானம் வைத்து பணம்பெற்றாா். பணத்தை மோட்டாா் சைக்கிளில் வைத்துக் கொண்டு சென்றாா். வங்கியைக்கடந்து சிறிது தூரம் சென்றதும் அவரை மோட்டாா் சைக்கிளில் பின்தொடா்ந்த இருவா், அவரது வாகனத்தின் முன்பு ரூ.200 நோட்டை போட்டுள்ளனா். அந்த நோட்டை எடுக்க சேதுராமலிங்கம் வாகனத்தை நிறுத்தினாா். அப்போது அந்த நபா்கள் மோட்டாா் சைக்கிளில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு தப்பினா். இதுகுறித்து சேதுராமலிங்கம் அளித்த புகாரின் பேரில், மேலூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT