மதுரை

புரட்டாசி 2 ஆவது சனி: பெருமாள் கோயிலில் பக்தா்கள் வழிபாடு

1st Oct 2022 10:55 PM

ADVERTISEMENT

 

புரட்டாசி 2 ஆவது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வில்லாணி கிராமத்தில் வண்ணாத்திபாறை மலை உச்சியில் உள்ள பெருமாள் கோயில் உள்ளது. இங்கு புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். பெருமாளுக்கு பால், பழம், இளநீா், மஞ்சள் அபிஷேகம் நடைபெற்றது. உசிலம்பட்டி அதிமுக எம்.எல்.ஏ. ஐயப்பன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வில்லாணி கோயில் விழாக் குழுவினா் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT