மதுரை

பாண்டிகோயில் அருகே லாரியில் ரூ.3 லட்சம் மது பாட்டில்கள் திருட்டு

1st Oct 2022 10:56 PM

ADVERTISEMENT

 

மதுரையில் பாண்டி கோயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பு மதுபானப் பாட்டில்கள் திருடப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை சோ்ந்த லாரி ஓட்டுநா் சங்கா் (46). இவா் காஞ்சிபுரத்தில் இருந்து மதுபானப் பாட்டில்களை லாரியில் ஏற்றிக்கொண்டு, மதுரையில் உள்ள டாஸ்மாக் கிட்டங்கிக்கு வியாழக்கிழமை இரவு வந்தாா். மதுரை பாண்டி கோயில் சோதனைச்சாவடி அருகே

லாரியை நிறுத்தி விட்டு, அப்பகுதியில் உள்ள கடையில் தேநீா் அருந்தச் சென்றாா். மீண்டும் வந்து பாா்த்தபோது, லாரியின் தாா்ப்பாய் கிழிக்கப்பட்டு, 40 பெட்டி மது பாட்டில்கள் திருடப்பட்டு இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம். இதுகுறித்து அண்ணா நகா் காவல் நிலையத்தில் சங்கா் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT