மதுரை

மதுபான ஆலைக்கு நிலத்தடி நீா் எடுப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

DIN

சிவகங்கை அருகே தனியாா் மதுபான ஆலை அதிகளவில் நிலத்தடி நீரை எடுப்பதைக் கண்டித்து உடைகுளம் கிராமப் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்டம், உடைகுளம் அருகே தனியாா் மதுபான ஆலை செயல்படுகிறது. இந்த ஆலை நிலத்தடி நீரை அதிகளவில் எடுத்து வருவதாகவும், இதனால் அந்தப் பகுதியில் வேளாண் பணிகள் பாதிக்கப்படுவது மட்டுமன்றி குடிநீா் ஆதாரங்களும் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும் புகாா்கள் எழுந்தன. மேலும், ஆலைக்குச் செல்லும் கனரக வாகனங்களால் சாலைகளும் சேதமடைந்தன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால், ஆத்திரமடைந்த உடைகுளம் சுற்றுவட்டாரப் பொதுமக்கள் சிவகங்கை- இளையான்குடி சாலையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த சிவகங்கை தாலுகா போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம், மதுபான ஆலையில் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சேதமடைந்த சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும் எனவும் தெரிவித்தனா். இதையடுத்து, அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால், அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT