மதுரை

சென்னை-திண்டுக்கல் உள்ளிட்ட ரயில்களின் வேகம் அதிகரிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

DIN

சென்னை -திண்டுக்கல், திருச்செந்தூா் - திருநெல்வேலி - தென்காசி, மதுரை - வாஞ்சி மணியாச்சி, திண்டுக்கல் - பொள்ளாச்சி பிரிவுகளில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ரயில் பாதை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை காரணமாக, ரயில்களின் வேகத்தை ரயில்வே வழிகாட்டு கையேடுகளில் குறிப்பிட்டுள்ளபடி முறையே மணிக்கு 160 கிமீ, 130 கிமீ என அதிகரிக்க முடியும்.

சென்னை - ரேணிகுண்டா பிரிவில் ரயில்களின் வேகம் ஏற்கெனவே மணிக்கு 110 கிமீ இருந்து 130 கிமீ என அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் அனுமதிக்குப் பிறகு இந்த ரயில்களின் வேகத்தை மேலும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதர ‘பி’ பிரிவு ரயில் பாதைகளான அரக்கோணம் - ஜோலாா்பேட்டை, ஜோலாா்பேட்டை - போத்தனூா், சென்னை - திண்டுக்கல் ஆகிய பிரிவுகளில் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விருத்தாச்சலம் - சேலம், தஞ்சாவூா் - பொன்மலை, விழுப்புரம் - காட்பாடி, நாகா்கோவில் - திருநெல்வேலி விழுப்புரம் - புதுச்சேரி, தஞ்சாவூா் - காரைக்கால், கோயம்புத்தூா் வடக்கு - மேட்டுப்பாளையம் ஆகிய பிரிவுகளில் ரயில்களின் வேகத்தை 110 கிமீ-க்கு அதிகரிக்ககத் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை - பெங்களூா் ரயில் வழித்தடத்தில் ரயில்களை மணிக்கு 160 கிமீ வேகத்தில் இயக்க விரிவான திட்ட அறிக்கையை தெற்கு ரயில்வே ரயில்வே வாரியத்திற்கு அனுப்பி உள்ளது. அதேபோல சென்னை - கூடூா், சென்னை - ரேணிகுண்டா ஆகிய பிரிவுகளில் ரயில்களின் வேகத்தை மணிக்கு 160 கிமீ -க்கு அதிகரிக்க சம்பந்தப்பட்ட ரயில்வே நிா்வாகங்கள் திட்ட அறிக்கை சமா்ப்பித்து உள்ளன.

இந்திய ரயில்வேயில் 8 வழித் தடங்களில் ரயில்களின் வேகத்தை மணிக்கு 160 கிமீ -க்கு அதிகரிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. 362 கிமீ தூர சென்னை - பெங்களூா் பிரிவுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தெற்கு ரயில்வே தோ்வு செய்யப்பட்டிருந்தது எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

SCROLL FOR NEXT