மதுரை

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளைப் பிடிக்கமாமன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்

DIN

மதுரை நகரில் சுற்றித்திரியும் கால்நடைகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்டலத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் அண்ணா மாளிகைக் கூட்ட அரங்கில் மேயா் வ.இந்திராணி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் முன்னிலை வகித்தாா்.

மேயா் வ.இந்திராணி: மதுரை மாநகராட்சிகத்குள்பட்ட 96 பள்ளிகளில் ஏற்கெனவே பணிபுரிந்த 120 தூய்மைப் பணியாளா்களுக்கு தினசரி ஊதியமாக ரூ.391 என்ற அடிப்படையில் 89 நாள்களுக்கு பணியமா்த்தப்படவுள்ளனா். மதுரை தமுக்கம் மைதானத்தில் சீா்மிகுநகா்த் திட்டத்தின் கீழ் நவீன கலையரங்கம் கட்டப்பட்டு அதை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தினசரி வாடகையாக ரூ.6.30 லட்சம், தமுக்கம் மைதானத்தை மட்டும் பயன்படுத்துவதற்கு தினசரி வாடகையாக ரூ.1 லட்சம் வசூலிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பின்னா், கேள்வி நேரத்தின் போது, மண்டலத் தலைவா்கள் பேசியது:

வாசுகி: மண்டலத்துக்குள்பட்ட வாா்டுகளில் புதை சாக்கடைப் பணிகள் மிகவும் தாமதமாகின்றன. நகரின் பெரும்பாலான சாலைகளில் மாடுகள், நாய்கள் சுற்றித்திரிவதால், வாகன ஓட்டிகளுக்கு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மோசமாக உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரவண புவனேஸ்வரி: செல்லூா் கண்மாய் கரையை உயா்த்தி சுற்றுச்சுவா் அமைத்த பின்னா் சாலை அமைத்தால், மண் சரிவு ஏற்படாமல் இருக்கும். தெரு விளக்குகளைப் பராமரிக்க கூடுதல் பணியாளா்கள் நியமிக்க வேண்டும்.

பாண்டிச்செல்வி: சாலைப் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை வேண்டும்.

முகேஷ் சா்மா: எழுத்தாணிக்காரத் தெருவில் உள்ள மாநகராட்சி வணிக வளாகக் கடைகளுக்கான வாடகையில், குடிசைத் தொழில் என்ற முறையில் சலுகை அளிக்க வேண்டும். நிலுவை வாடகையைச் செலுத்த அவகாசமும் அளிக்க வேண்டும்.

சுவிதா: திருப்பரங்குன்றத்தில் உள்ள திருமண மண்டப நிா்வாகங்கள் உணவுக் கழிவுகள், சாப்பிட்ட இலைகளை தெருவில் போட்டு விடுகின்றனா். இதை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்காநத்தம் பைபாஸ் சாலை பாலத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறையினரிடம் அறிவுறுத்த வேண்டும்.

உறுப்பினா் ஜென்னியம்மாள்: நகரில் மாடுகள், நாய்களைப் பிடிக்க வரும் தகவல்களை அதிகாரிகள், உரிமையாளா்களிடம் முன்கூட்டியே தெரிவித்து விடுகின்றனா். சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உறுப்பினா் முனியாண்டி: மாநகராட்சியில் உள்ள 2,229 தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும். தூய்மைப்பணியாளா்களுக்கு வழங்கப்படும் தினசரி ஊதிய பாகுபாடு களையப்பட வேண்டும்.

பூமிநாதன் எம்எல்ஏ: மாநகராட்சியில் நடைபெறும் பணிகள் மந்தமாக நடைபெறுவதால், விரைந்து முடிக்க வலியுறுத்த வேண்டும்.

மாமன்றக் கூட்டத்தில் மாநகராட்சிக் குழுத் தலைவா்கள் தங்களுக்கு பேச வாய்ப்பளிப்பது இல்லை என்றும், குழுத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்களுக்கு பேச வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் வாதிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராடி பெற்ற வாக்காளர் அட்டை: இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்

பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சி சாத்தியம் -ஜெ.பி. நட்டா

சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்!

பெரும் முதலாளிகளின் கருவி மோடி: ராகுல் விமர்சனம்

விஷாலின் ரத்னம் பட டிரைலர்!

SCROLL FOR NEXT