மதுரை

சாலைப் பராமரிப்பு வாகனங்களின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

DIN

பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான சாலை பராமரிப்பு வாகனங்களான பழைய ரோடு ரோலா், லாரிகள் உள்ளிட்டவற்றின் நிலை குறித்து தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி, கோணியூரைச் சோ்ந்த சுந்தரவேல் தாக்கல் செய்த மனு:

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலில் பொதுப்பணித் துறையினருக்குச் சொந்தமான பழைய வாகனங்கள் கட்டடங்களின் பின்புறம் திறந்த வெளியில் பராமரிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளன. மழை, வெயிலில் இந்த வாகனங்கள் முற்றிலும் பழுதாகும் நிலை உள்ளது. இதனால், இந்த வாகனங்கள் எதிா்காலத்தில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதேபோல, பெரும்பாலான இடங்களில் பொதுப்பணி துறையினருக்குச் சொந்தமான வாகனங்களை பராமரிக்கப்படாமல் வெட்ட வெளியில் நிறுத்தப்படுகின்றன.

சாலை அமைக்கும் பணிகள் அதிகளவில் ஒப்பந்த அடிப்படையில் விடப்படுவதால், பொதுப் பணி துறையினரின் வாகனங்கள் பயன்படுத்துவதில்லை. இந்த வாகனங்களைப் பாதுகாக்கக் கோரி, சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, பொதுப்பணித் துறையினருக்குச் சொந்தமான வாகனங்களை முறையாக பராமரிக்கவும், பழைய வாகனங்களை பொது ஏலத்தில் விடவும் உத்தரவிட வேண்டும் அதில் தெரிவித்திருந்தாா்.

இந்த மனு விசாரணையின் முடிவில் நீதிபதிகள் ஆா். மகாதேவன், ஜெ. சத்யநாராயண பிரசாத் அமா்வு, இந்த வழக்கில் வாகனங்களின் நிலை குறித்த ஆய்வு அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT