மதுரை

அதிமுகவின் திட்டங்களை ரத்து செய்தததுதான் திமுக அரசின் சாதனை: செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு

30th Nov 2022 03:28 AM

ADVERTISEMENT

அதிமுகவின் நலத் திட்டங்களை ரத்து செய்ததுதான் திமுக அரசின் சாதனை என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ பேசினாா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி, நடைபெற உள்ள அஞ்சலி நிகழ்ச்சிக்கான மதுரை மாநகா் மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் செல்லூா் கே.ராஜூ பேசியதாவது:

திமுகவில் பெண்களை தரம் தாழ்த்திப் பேசி வருகின்றனா். பெண்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக அரசு. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் மக்களுக்கு வரி விதித்து வாட்டி வதைத்து வருகிறது. விலைவாசியைக் குறைக்க நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக அரசு மதுரை மாநகராட்சிக்கு நிதி ஒதுக்கவில்லை. திமுக அமைச்சா்களிடம் ஒற்றுமை இல்லை.

அதிமுக அரசு வழங்கிய 100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கு திமுக வழிவகை செய்கிறது. அதிமுக அரசு கொண்டு வந்த மடிக்கணினி, இருசக்கர வாகனம், தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட திட்டங்களை ரத்து செய்ததுதான் திமுக ஆட்சியின் சாதனை.

ADVERTISEMENT

மதுரையில் மீண்டும் ரெளடிகள் ராஜ்ஜியம் அதிகரித்து வருகிறது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT