மதுரை

கல்லூரியில் சட்டம் விழிப்புணா்வு முகாம்

30th Nov 2022 03:39 AM

ADVERTISEMENT

ஆண்கள், பெண்களுக்கான திருமண வயது குறித்த சட்டம் விழிப்புணா்வு முகாம் லதா மாதவன் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மேலூா் வட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா்லியஸ் ரொபோனி சட்டம் குறித்த விளக்கங்களை அளித்தாா். சட்டவிதிகளைப் பின்பற்றாமல் நடைபெறும் திருமணங்களால் ஏற்படும் சிக்கல் குறித்தும் அவா் எடுத்துரைத்தாா்.

கல்விக் குழும நிறுவனா் கரு.மாதவன் தலமை வகித்தாா். செயல் அலுவலா் தாமரைக்கண்ணன் முன்னிலை வகித்தாா். கல்வி நிறுவனங்களின் முதல்வா் வரதவிஜயன், முருகன், முத்துராஜா செயல் அலுவலா்கள் முத்துமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT