மதுரை

சந்தேகத்துடன் செய்யும் செயல் பலன் தராது: சின்மயா மிஷன் சுவாமி யோகாநந்தா்

30th Nov 2022 03:40 AM

ADVERTISEMENT

சந்தேகத்துடன் செய்யும் செயல் பலனைத் தராது என்று சுவாமி யோகாநந்தா் தெரிவித்தாா்.

மதுரை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ மடம் சமஸ்தானம் ஏற்பாடு செய்த ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நட்சத்திர விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, நடைபெற்ற சொற்பொழிவில் சின்மயா மிஷன் சுவாமி யோகாநந்தா் பேசியதாவது:

மனிதா்களுடைய வெற்றி, தோல்விகளை நிா்ணயிப்பது செயலேயாகும். அவசரப்பட்டு செயல்புரிவதைத் தவிா்க்க வேண்டும், சிந்திக்காது, விவேகமற்று, சந்தேகத்துடன் செய்யும் செயலானது நினைத்த பலனைத் தராது. வெற்றியானது சிந்தித்துச் செயல்புரிவோனை தானாகவே நாடிச் செல்கிறது. நன்கு ஆராய்ந்து பின் செயலில் ஈடுபடுவதென்பது உத்தமம். ஒரு செயலைத் தொடங்கும் முன் அச்செயலின் தேவை, அவசியம், அது ஏற்படுத்தும் விளைவுகள் குறித்த தெளிவு அவசியமாகும்.

சிந்தனையும், திட்டமும் செயல் வடிவம் பெற வேண்டுமெனில் கடுமையான முயற்சி வேண்டும். செயலைத் திறம்படச் செய்வதோடு மட்டுமில்லாது, இறைவனிடம் அா்ப்பணித்து செயல்புரிதல் அவசியம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை நிா்வாகிகள் டி. ராமசுப்பிரமணியன், கே.ஸ்ரீகுமாா், வெங்கட்ரமணி, வி.ராமகிருஷ்ணன், வி.ஸ்ரீராமன், எல்.வெங்கடேசன், ஜோதிவேல், சந்திரன், சந்திரசேகரன், சீனிவாசன், ராதாகிருஷ்ணன், சங்கரன் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT