மதுரை

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

30th Nov 2022 03:40 AM

ADVERTISEMENT

அலங்காநல்லூரில் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

மதுரை மாவட்ட கல்வித் துறை சாா்பில் குழந்தைகள் தினமான நவம்பா் 14 முதல் உலக மாற்றுத்திறனாளி தினமான டிசம்பா் 3 வரை பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அலங்காநல்லூா் வட்டார வளமையத்தில் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் (ஓட்டப் பந்தயம், பாட்டிலில் நீா் நிரப்புதல், பந்து எறிதல், வளையங்களை இணைத்தல், லெமன் வித் ஸ்பூன்) நடைபெற்றன.

போட்டியை இணை இயக்குநா் ஜெயக்குமாா் தொடக்கி வைத்து வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா முன்னிலை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் முத்துலெட்சுமி, உதவித் திட்ட அலுவலா் அ.காா்மேகம், மாவட்டத் திட்ட உதவி ஒருங்கிணைப்பாளா் எ.குருநாதன், ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஆஷா, ஜெசிந்தா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT