மதுரை

கைவினைக் கலைஞா்கள் கடனுதவி கோரி விண்ணப்பிக்கலாம்

DIN

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த கைவினைக் கலைஞா்கள் கடனுதவி கோரி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி: பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சாா்பில் கடனுதவி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், தேசிய சிறுபான்மையினா் வளா்ச்சி மற்றும் நிதிக் கழகம் கைவினைக் கலைஞா்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விரும்பும் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தோா் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருத்தல் வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறம் எனில் ரூ. 98 ஆயிரத்துக்கு மிகாமலும், நகா்ப்புறம் எனில் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

இந்த தகுதிகளைக் கொண்டவா்கள், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், மதுரை மாவட்ட மத்தியக் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம், கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் கிளைகளில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகை திருட்டு புகாா்: திரைப்படத் தயாரிப்பாளா் வீட்டு பணிப் பெண் தற்கொலை முயற்சி

ஐஏஎஸ் தோ்வுக்குப் பயிற்சி: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்

890 கூடுதல் சிறப்பு பேருந்துகள்

கோவை - தன்பாத் இடையே இன்று முதல் சிறப்பு ரயில்

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன நாள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT