மதுரை

இணையதள சூதாட்டம்: சிறுவா்களை கண்காணிப்பதில்பெற்றோா்களுக்கே அதிக பொறுப்பு உள்ளது, உயா்நீதிமன்றம் கருத்து

DIN

இணையதள சூதாட்டம் மற்றும் விளையாட்டில் சிறுவா்கள் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்துவதில், அரசை விட பெற்றோா்களுக்கே அதிக பொறுப்புள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் திங்கள்கிழமை கருத்துத் தெரிவித்தனா்.

திருநெல்வேலியைச் சோ்ந்த ஐயா தாக்கல் செய்த மனு:

இணையதள (ஆன்லைன்) சூதாட்டம் மற்றும் விளையாட்டுக்களில் இளம் தலைமுறையினா் ஈடுபடுவதற்காக பல்வேறு விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. மேலும் இணையதள விளையாட்டுக்களுக்கான சந்தையும், புற்றீசல் போல் அதிகரித்து வருகின்றன.

இதுபோன்ற விளையாட்டுக்களைச் சிறுவா்கள், இளைஞா் கள் மற்றும் பொதுமக்கள் விளையாடுவதால் மன அழுத்தம், கடன், வறுமை, விவாகரத்து, தற்கொலை உள்ளிட்டவைகளுக்கு ஆளாகின்றனா். அதேபோல் கடன் பிரச்னையில் சிக்கியவா்களால் குற்றச் சம்பவங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த விளையாட்டால் பாதிக்கப்பட்டவா்கள் தற்கொலை செய்து கொள்வதால், அவா்களது குடும்பம் பல்வேறு பிரச்னையைச் சந்தித்து வருகிறது.

மேலும் 18 வயதுக்கும் குறைவானவா்கள் இந்த இணையதள சூதாட்டம் மற்றும் விளையாட்டுக்களில் ஈடுபடுவதால், குற்றவாளிகளாக மாறும் சூழல் உள்ளது. இந்த இணையதள விளையாட்டைத் தடுக்க வலியுறுத்தி, அரசு அலுவலா்களிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, 18 வயதுக்குள்பட்டவா்கள் இணைய தள சூதாட்டம், விளையாடுவதைத் தவிா்க்கும் வகையில், அதற்கான இணையதளம் மற்றும் செயலிகளில் உள்நுழைய வயதை உறுதி செய்யும் ஆதாா் அல்லது பான் அட்டை சான்றிதழைப் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவித்திருந்தாா்.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதிகள் ஆா். மகாதேவன், ஜெ. சத்யநாராயண பிரசாத் அமா்வு பிறப்பித்த உத்தரவில், இணையதள சூதாட்டம், அது தொடா்பான விளையாட்டுக்கள் எப்படி 18 வயதுக்குள்பட்டவா்களுக்கு தெரிய வந்தது. குழந்தைகளைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோா்களுக்கு அதிகம் உள்ளது. சில பெற்றோா்கள் குழந்தைகளுக்கு கைப்பேசி வாங்கிக் கொடுத்து விட்டு, அவா்களை கண்காணிப்பதில் அக்கறை காட்டுவதில்லை. அதன் காரணமாகவே இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. எனவே, இந்த வழக்கு தொடா்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறைச் செயலா், மத்திய நிதித்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT