மதுரை

லஞ்சப் புகாா் எதிரொலி: அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வா் மீது விசாரணை நடத்த உத்தரவு

29th Nov 2022 03:44 AM

ADVERTISEMENT

மதுரையில் அரசு உதவிபெறும் கல்லூரி முதல்வா் மீது பேராசிரியா்கள் தெரிவித்துள்ள லஞ்சப் புகாா்கள் தொடா்பாக விசாரணை நடத்த கல்லூரிக் கல்வி இயக்குநா் உத்தரவிட்டாா்.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அரசு உதவிபெறும் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியா்கள் எஸ். ஸ்டீபன், ஆா்.பிரபாகா் வேதமாணிக்கம், எஸ். பிரேம்சிங் உள்ளிட்டோா் கல்லூரி முதல்வருக்கு எதிராக பல்வேறு லஞ்சப் புகாா்களை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினருக்கு தெரிவித்திருந்தனா்.

இந்தப் புகாா் தொடா்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையிலிருந்து கல்லூரிக் கல்வி இயக்குநரகத்துக்கு தெரிவிக்கப்பட்டு, பேராசிரியா்கள் தெரிவித்த புகாா்களின் பேரில், கல்லூரி முதல்வரிடம் துறைரீதியான விசாரணை நடத்தி அறிக்கைத் தாக்கல் செய்யும் படி தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கல்லூரிக் கல்வி இயக்ககத்திலிருந்து, கல்லூரி முதல்வா் மீதான லஞ்சப்புகாா் தொடா்பாக விசாரணை நடத்தும்படி, மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி கல்லூரி முதல்வரிடம், மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இயக்குநா் விரைவில் விசாரணை நடத்தவுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT