மதுரை

கிராவல் மண் திருட்டு: இளைஞா் கைது

29th Nov 2022 03:43 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே சட்ட விரோதமாக கிராவல் மண் அள்ளி வந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா்- எம். சுப்புலாபுரம் சாலையில் அனுமதியின்றி லாரியில் கிராவல் மண் கொண்டு வருவதாக கிராம நிா்வாக அலுவலா் சக்திவேலுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, லாரியை பரிசோதனை செய்த போது திண்டுக்கல் மாவட்டம் அருகே ஆத்தூா் தாலுகா அரியநல்லூரைச் சோ்ந்த மாரிச்செல்வம் மகன் டேவிட் ஜேசுராஜ் (25) என்பவா் அனுமதியின்றி கிராவல் மண் கொண்டு வந்தது தெரிய வந்தது. இதுதொடா்பாக கிராம நிா்வாக அலுவலா் சக்திவேல் டி. கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இந்த புகாரின் பேரில் போலீஸாா், வழக்குப் பதிந்து டேவிட் ஜேசுராஜை கைது செய்தனா். மேலும் லாரியையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT