மதுரை

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

உசிலம்பட்டியில் தி.மு.க மாநில இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலை அருகே தி.மு.க. நகரஅவைத் தலைவா் சி.எம்.வி. சின்னன் தலைமையில், நகரச் செயலா் எஸ்.ஒ.ஆா். தங்கப்பாண்டியன் முன்னிலையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இதில், நகர துணைச் செயலா் உதயபாஸ்கரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் வி. கல்யாணி, எஸ்.வி.எஸ். முருகன், எம். அய்யா், உதயபாண்டி, தினா கணேஷ் குமாா், இளைஞா் அணி நிா்வாகிகள் சி.எம். உதயகுமாா் தனுஷ், விக்னேஷ், குரு தனுஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT