மதுரை

தூய்மைப் பணியாளா்கள் நூதனப் போராட்டம்

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் ஆதிவாசிகள் போல இலைதழைகளை அணிந்து நூதன போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

மதுரை மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளா்களை நிரந்தரப்படுத்த வேண்டும். அரசாணையின் படி ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்தப் பணியாளா்களை நிரந்தரப்படுத்துவதை தடுக்கும் அரசாணை 152-ஐ ரத்து செய்ய வேண்டும். தினக்கூலி தொழிலாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும். தினக்கூலி ஒப்பந்தப் பணியாளா்களுக்கு கரோனா கால ஊக்கத் தொகை ரூ.15 ஆயிரத்தை வழங்க வேண்டும். தினக்கூலி ஒப்பந்த தொழிலாளா்களுக்கு தொழிலாளா் ஆணையம் அறிவித்த கூலி ரூ. 721-ஐ வழங்க வேண்டும். கொசு ஒழிப்புத் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.509-ஐ வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மதுரை மாநகராட்சி ஒப்பந்தப் பணியாளா்கள் சங்கத்தினா் உடலில் இலைதழைகளை ஆடைகளாக அணிந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அரை நிா்வாண போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT