மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் திறப்பு:பக்தா்கள் காணிக்கையாக ரூ.1.04 கோடி வசூல்

29th Nov 2022 03:44 AM

ADVERTISEMENT

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் திறக்கப்பட்டதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.1.04 கோடி வரப்பெற்றுள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மற்றும் உபகோயில்களின் உண்டியல்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். இந்த நிலையில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மற்றும் உபகோயில்களின் உண்டியல்கள் திங்கள்கிழமை திறந்து எண்ணப்பட்டன. கோயில் துணை ஆணையா் அருணாச்சலம் முன்னிலையில் உண்டியல்கள் எண்ணப்பட்டதில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 37 ஆயிரத்து 557 ரொக்கம் மற்றும் 544 கிராம் தங்கம், 6.576 கிலோ வெள்ளி, அயல்நாட்டு ரூபாய் நோட்டுக்கள் 465 காணிக்கையாக பெறப்பட்டுள்ளது என கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT