மதுரை

லாரியில்பேட்டரி திருட்டு

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தில் பேட்டரி திருடப்பட்டது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மதுரை மேலக்கோயில்குடியைச் சோ்ந்த தவபாண்டியன் மகன் சரவணன் (42). இவருக்கு சொந்தமாக டிப்பா் லாரி மற்றும் பொக்லைன் இயந்திரம் உள்ளது. இந்த நிலையில் டி. கல்லுப்பட்டி அருகே இவருக்கு சொந்தமான புளுமெட்டலில் லாரி மற்றும் பொக்லைனை நிறுத்தி வைத்திருந்தாா். லாரியின் ஓட்டுநா்கள் அதை இயக்க வந்த போது லாரி மற்றும் பொக்லைனில் இருந்த 3 பேட்டரிகள், 3 ஸ்போ் பேட்டரிகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் டி. கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT