மதுரை

உசிலம்பட்டியில் நுகா்வோா் பாதுகாப்பு பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம்

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

உசிலம்பட்டியில் தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு பேரமைப்பு மற்றும் அகில இந்திய மக்கள் உரிமை பாதுகாப்புக் கழகம் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு பேரமைப்பு மாவட்டத் தலைவா் பொன் ஆதிசேடன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ரமேஷ் முன்னிலை வகித்தாா். இதில், உசிலம்பட்டி பகுதி 58 கிராம கால்வாய்க்கு நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட 10 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்டத் துணைத் தலைவா் லட்சுமணன், மாவட்ட துணைச் செயலா் லோகநாதன், மாவட்டப் பொருளாளா் சின்னக்கோடி, மாவட்ட சட்ட ஆலோசகா் தவசி, உறுப்பினா்கள் தெய்வேந்திரன், காட்டுராஜா, சுருளிவேல், சித்தன், அக்னி, ஒச்சண்ணன், மதிவாணன், சுருளி, கண்ணன், பிரபு, ஜெகதீஸ்வரன், வினோத், அன்புராஜன், மணிகண்டன், பிரேம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT