மதுரை

பழைய ரயில் பெட்டிகளை இணைத்துராஜபாளையம் வழியாகமைசூா்- திருநெல்வேலி இடையே ரயில் விடக் கோரிக்கை

27th Nov 2022 11:48 PM

ADVERTISEMENT

 

 மைசூா்- மயிலாடுதுறை, தூத்துக்குடி ரயில்களில் உள்ள பழைய பெட்டிகள் புதிய எல்எச்பி பெட்டிகளாக மாற்றப்படுவதால், அந்த பழைய ரயில் பெட்டிகளை இணைத்து மைசூா்- திருநெல்வேலிக்கு ராஜபாளையம் வழியாக சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

மைசூரிலிருந்து தூத்துக்குடி மற்றும் மயிலாடுதுறை செல்லும் ரயில்களில் உள்ள பழைய ஐசிஎப் பெட்டிகள், நவீன தொழில்நுட்பத்துடன் சிவப்பு வண்ண எல்எச்பி பெட்டிகளாக மாற்றப்படுகின்றன. எனவே இந்த ரயில்களில் உள்ள பழைய ரயில் பெட்டிகளைக் கொண்டு மைசூரில் இருந்து பெங்களூா், சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, ராஜபாளையம், தென்காசி, பாவூா்சத்திரம், அம்பை வழியாக திருநெல்வேலிக்கு புதிய சிறப்பு இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து தென் மாவட்டத்தைச் சோ்ந்த ரயில் பயணிகள் கூறியதாவது: மதுரை ரயில்வே கோட்டத்தில் மிக முக்கிய வழித்தடமாக விருதுநகா், ராஜபாளையம், தென்காசி, பாவூா்சத்திரம், அம்பை, திருநெல்வேலி வழித்தடம் உள்ளது. இந்த வழித்தடத்தில் 3 மாவட்டங்கள் பயன்பெறும் மிக முக்கிய நகரங்கள் உள்ளன. இந்த வழியில் பெங்களூருக்கு ரயில்களை இயக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். தற்போது அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. மைசூா்- தூத்துக்குடி, மயிலாடுதுறை ரயில்களின் பழைய ரயில் பெட்டிகளை பயன்படுத்தி உடனடியாக மைசூா்- திருநெல்வேலிக்கு பெங்களூரு, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, ராஜபாளையம், தென்காசி, அம்பை வழியாக சிறப்பு ரயில் இயக்க வேண்டும். இதன் மூலம் தென்காசி மாவட்ட பகுதிகளுக்கு முதல் முறையாக கரூா், நாமக்கல், சேலம், பெங்களூரு, மைசூருக்கு ரயில் இணைப்பு கிடைக்கும். எனவே மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக தெற்கு ரயில்வே மற்றும் தென்மேற்கு ரயில்வே பொது மேலாளா்களுக்கு கடிதம் எழுதுவதுடன், நேரில் வலியுறுத்தி இந்த சிறப்பு ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT