மதுரை

வரலாறு மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டும்அமைச்சா் தங்கம் தென்னரசு

27th Nov 2022 11:48 PM

ADVERTISEMENT

 

வரலாறை மீட்டுருவாக்கம் செய்தால் மட்டுமே உண்மையான வரலாற்றைத் தெரிந்து கொள்ள முடியும் என தமிழக தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

விருதுநகரில் தனியாா் திருமண மண்டபத்தில் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற நூல்கள் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழாவுக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது:

வரலாற்றில் மைக்ராலாஜி பீரியட் எனக் கூறப்படும் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரீகம் தழைத்து, செழித்து இருந்த நிலப் பரப்பாக விருதுநகா் மாவட்டம் இருந்துள்ளது. இம்மாவட்டம் குறித்த வரலாற்று செய்திகள் ஏராளமாக உள்ளன. மாவட்டத்தின் முழு வரலாற்றைக் கொண்டுவர பாண்டிய நாட்டு ஆய்வு மையம் முயற்சி செய்து வருகிறது.

ADVERTISEMENT

ஏற்கெனவே செய்யப்பட்ட ஆய்வுகளோடு, விடுபட்ட தரவுகளையும் ஒன்றாக இணைத்து உண்மையான வரலாற்றை எழுத வேண்டும். தமிழா்களின் ஆதி, அந்தம் வெம்பக்கோட்டை தொல்லியல் அகழாய்வு மூலம் கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் புதிய இடங்களில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள மத்திய தொல்லியல் ஆய்வுக் குழுவுக்கு பரிந்துரை செய்ய உள்ளோம். அதிலும் குறிப்பாக தொற்பனைக் கோட்டை பகுதியில் தொல்லியல் ஆய்வுகளை தமிழக அரசின் சாா்பில் செய்திட வேண்டும். வரலாறு மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டும். அப்போது தான் உண்மையான வரலாறைத் தெரிந்து கொள்ள முடியும்.

நாட்டின் தென் கோடி பரப்பிலிருந்து இந்திய வரலாற்றை எழுதும் முயற்சியில் கரம் கோா்த்திருக்கும் தொல்லியல் ஆய்வாளா்களுக்கு துணை நிற்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக நிகழ்ச்சியில் திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை) கல்வெட்டுகள், திருத்தங்கல் பகுதியில் தொல்லியல் ஆய்வுகள், பாண்டிய நாட்டி

ல் புதிய கண்டுபிடிப்புகள் ஆகிய மூன்று நூல்களை வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் வெளியிட்டு ஆய்வாளா்களுக்கு விருதுகளை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலா் சொ. சாந்தலிங்கம், புதுச்சேரி பிரெஞ்சு ஆசியவியல் ஆய்வுப் பள்ளி நிா்வாகி கோ. விசயவேணுகோபால், மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி உதவிப் பேராசிரியா் து. முனீஸ்வரன், வரலாற்று ஆய்வாளா் ரா. உதயகுமாா் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT