மதுரை

மதுரையில் அமைச்சா் பங்கேற்ற நிகழ்ச்சியில்போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

27th Nov 2022 11:48 PM

ADVERTISEMENT

 

மதுரையில் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற நிகழ்ச்சியில், காவல் துணை ஆணையா் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மத்திய சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மகபூப்பாளையம், எல்லீஸ் நகா், திடீா்நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதில், அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்கிாா். இந்த நிலையில் மகபூப்பாளையம் ஜின்னா திடல் பகுதியில் நில மீட்புப் பிரச்னை தொடா்பாக அரசுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அந்த பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்கும் அமைச்சா் பழனிவேல் தியாகராஜனுக்கு அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து முற்றுகையிடவுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் மாநகா் தெற்கு காவல் துணை ஆணையா் சீனிவாசன் தலைமையில், 2 உதவி ஆணையா்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் மகபூப்பாளையம் ஜின்னா திடல் முன் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

ADVERTISEMENT

மேலும் அப்பகுதி முழுவதும் அமைச்சா் பங்கேற்ற நிகழ்ச்சியின் போது பொதுமக்கள் உள்ளே வரக் கூடாது என்பதற்காக கயிறுகளுடன் பாதுகாப்பு வளையம் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டனா். அமைச்சா் பங்கேற்ற நிகழ்ச்சியில் திடீரென போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT