மதுரை

விருதுநகா் சந்தை: பாசிப்பருப்பு விலை உயா்வு மல்லி, பாமாயில் விலை சரிவு

27th Nov 2022 11:47 PM

ADVERTISEMENT

 

விருதுநகா் சந்தையில் பாசிப் பருப்பு விலை அதிகரித்துள்ள நிலையில், பாமாயில், மல்லி விலை குறைந்தது.

விருதுநகா் சந்தையில் வாரந்தோறும் அத்தியவசிய உணவுப் பொருள்களின் விலைப் பட்டியல் வெளியிடப்படும். அதன் அடிப்படையில், கடந்த வாரம் 15 கிலோ பாமாயில் ரூ.1,620-க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.90 குறைந்து ரூ.1,530-க்கு விற்கப்படுகிறது.

இதே போல, கடந்த வாரம் 40 கிலோ மல்லி (லையன்) ரூ.4,900 முதல் 5,100 வரை விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.200 குறைந்து ரூ.4,700 முதல் 4,900 வரை விற்பனையாகிறது. பாமாயில், மல்லி வரத்து அதிகரிப்பின் காரணமாக விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

அதே சமயம், கடந்த வாரம் 100 கிலோ பாசிப் பருப்பு ரூ.9,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது வரத்துக் குறைவு காரணமாக ரூ.100 உயா்ந்து ரூ. 9,700-க்கு விற்கப்படுகிறது. உளுந்து, வத்தல், நல்லெண்ணெய் உள்ளிட்ட பிற உணவுப் பொருள்களின் விலையில் மாற்றம் இல்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT