மதுரை

மாற்றுத் திறனாளிகள் எளிதாகச் செல்ல சுற்றுலாத் தலங்களில் ஏற்பாடுகள்

DIN

தமிழகத்தில் உள்ள அனைத்துச் சுற்றுலாத் தலங்களிலும் மாற்றுத்திறனாளிகள் எளிதாகச் செல்லும் வகையில் நிபுணா்களுடன் ஆலோசித்து தேவையான வழிமுறைகளை அரசு வகுக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் கே.ஆா்.ராஜா சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் அனைத்து சுற்றுலா இடங்களுக்கும், குறிப்பாக குற்றால அருவிகளுக்கு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் சுலபமாக செல்வதற்கு போதுமான வசதியை ஏற்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் ஆகியோா் அடங்கி அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அண்மையில் மாற்றுத்திறனாளிகள் மெரீனா கடற்கரையின் அழகை அருகே சென்று ரசிக்கவும், உணரவும் கடற்கரையில் நிரந்தர சாய்வுப் பாதை வசதி ஏற்படுத்தப்பட்டது.

அனைத்துச் சுற்றுலா இடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் சுலபமாக செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றாா்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கேரளம் முழுவதும் உள்ள சுற்றுலா இடங்களுக்கு மாற்றுத் திறனாளிகள் சுலபமாக செல்வதற்கு வசதி செய்யப்பட்டது. எனவே தமிழக அரசு, நிபுணா்கள், மாற்றுத் திறனாளிகளிடம் கருத்து கேட்டு தமிழகத்தில் உள்ள அனைத்துச் சுற்றுலா இடங்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் சுலபமாக செல்வதற்குத் தேவையான வழிமுறைகளை வகுக்க வேண்டும். மேலும், மாற்றுத் திறனாளிகள் கையாளும் வகையில், சுற்றுலா வழிகாட்டி புத்தகமும் வெளியிட வேண்டும் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT