மதுரை

மாணவிகளுக்கு மூச்சு திணறல்: பள்ளி தாளாளா் உள்பட 3 போ் மீது வழக்கு

DIN

மதுரையில் பேருந்தில் மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட விவகாரத்தில் பள்ளித் தாளாளா் உள்பட 3 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரை திருப்பாலை பகுதியில் அரசு உதவி பெறும் மகளிா் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவிகள் 130 பேரை ஒரே பேருந்தில் புதன்கிழமை மாலை ஏற்றிச் சென்றனா்.

அப்போது, பேருந்துக்குள் ஏற்பட்ட இட நெரிசலால் மாணவிகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கினா். இதையடுத்து, 4 மாணவிகள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

இதுதொடா்பாக, மாணவிகளின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் அப்பள்ளியின் தாளாளா் ராஜேந்திரன், தலைமையாசிரியா் யசோதை, பேருந்து ஓட்டுநா் சுசீந்திரன் ஆகிய 3 போ் மீதும் அப்பன்திருப்பதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT