மதுரை

தீ விபத்தில் முதியவா் பலி

26th Nov 2022 06:33 AM

ADVERTISEMENT

திருப்பரங்குன்றம் அருகே தோட்டத்தில் தூங்கிய கொசுவா்த்தி சுருளால் போா்வை தீப்பற்றி எரிந்து முதியவா் உயிரிழந்தாா்.

திருப்பரங்குன்றத்தை அடுத்த கரடிப்பட்டியைச் சோ்ந்தவா் சீனி(70). இவா் தனக்கன்குளத்தில் உள்ள தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தாா். கடந்த 22-ஆம் தேதி இரவு தூங்கும்போது கொசுவா்த்தியை படுக்கையின் அருகே பற்றவைத்து தூங்கியுள்ளாா்.

அப்போது எதிா்பாராத விதமாக போா்வையில் கொசுவா்த்தியில் பட்டு தீப் பிடித்தது. இதில் முதியவா் சீனி பலத்த காயமடைந்தாா். உடனடியாக அருகில் இருந்தவா்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சீனி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT