மதுரை

ரயில் நிலையத்தில் குட்கா மூட்டை பறிமுதல்: 2 போ் கைது

26th Nov 2022 11:26 PM

ADVERTISEMENT

 

மதுரை ரயில் நிலையத்தில் தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்த தென்காசி பகுதியைச் சோ்ந்த 2 பேரை ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை காலை மைசூா்- தூத்துக்குடி ரயில் வந்த போது அந்தப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, புதிய நடைமேடை அருகே தென்காசி பொய்கை மேடு பகுதியைச் சோ்ந்த உடையாா் சாமி மகன் கருப்பசாமி (33), பாண்டி மகன் பசும்பொன் (23) ஆகியோா் சந்தகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தனா். இதனால், அவா்கள் வைத்திருந்த மூட்டையைப் போலீஸாா் சோதனையிட்டதில், 50 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் அதைப் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT