மதுரை

ஆயிரம் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புக் கணக்கு தொடக்கம்

26th Nov 2022 06:30 AM

ADVERTISEMENT

மதுரை தெற்கு மாவட்ட இளைஞரணி சாா்பில், திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அஞ்சலக செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் ஆயிரம் குழந்தைகளுக்கு புதிய கணக்கு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பரங்குன்றத்தில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இளைஞரணி துணை அமைப்பாளா் வி.விமல் தலைமை வகித்தாா். பகுதிச் செயலா் கிருஷ்ண பாண்டியன், வட்டச் செயலா் எம்.ஆா்.பி.ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலா் மு.மணிமாறன் குழந்தைகளுக்கு சேமிப்புக் கணக்கை தொடக்கி வைத்துப் பேசினாா்.

மாநகராட்சி மேற்கு மண்டலத் தலைவா் சுவிதா விமல், இளைஞரணி அமைப்பாளா் மதன்குமாா், துணை அமைப்பாளா் சுரேஷ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் இளைஞரணி பெருங்குடி வசந்த், தனக்கன்குளம் அஜித்குமாா், மாவட்டக் குழு உறுப்பினா் புவனேஸ்வரி ராஜசேகா், கிருத்திகா தங்கபாண்டி, திருமங்கலம் உபகோட்ட அஞ்சல் ஆய்வாளா் ஜாய்ஸ், அஞ்சலக அதிகாரி முனிகணேஷ், காஞ்சனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT