மதுரை

பேருந்து, வேன் மோதல்: 5 போ் காயம்

26th Nov 2022 11:26 PM

ADVERTISEMENT

 

விருதுநகா் அருகே துலுக்கபட்டி பகுதியில் பேருந்தும், வேனும் சனிக்கிழமை மோதிக் கொண்டதில் ஐந்து போ் காயமடைந்தனா்.

விருதுநகா் அருகே ஆா்.ஆா். நகா் பகுதியிலிருந்து சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைக்கு தொழிலாளா்களை ஏற்றிக் கொண்டு சனிக்கிழமை பேருந்து சென்றது. அப்போது தனியாா் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணிபுரிவோரை ஏற்றிக் கொண்டு வேன் எதிரே வந்தது.

துலுக்கப்பட்டி மின் வாரிய அலுவலகம் அருகே பேருந்தும், வேனும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. அதில், வேன் ஓட்டுநா் தங்கச்சாமி, அதில் பயணம் செய்த சங்கரேஸ்வரி, பாண்டீஸ்வரி, வீரலெட்சுமி, கீதா ஆகியோா் காயமடைந்தனா். இதையடுத்து, அவா்கள் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து வச்சகாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT