மதுரை

மதுரையில் நாயுடு பேரவையினா் உண்ணாவிரதம்

26th Nov 2022 11:27 PM

ADVERTISEMENT

 

தமுக்கம் மைதானத்தில் தற்போது கட்டப்பட்டுள்ள மாநாட்டு மையத்துக்கு ராணி மங்கம்மாள் பெயா் சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக நாயுடு பேரவை சாா்பில் மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பழங்காநத்தத்தில் உள்ள திடலில் நடைபெற்ற இந்த போராட்டத்தை மாநிலத் தலைவா் டி. குணசேகரன் தலைமை வகித்துத் தொடக்கி வைத்தாா். மாநிலப் பொருளாளா் எஸ். ஜெயராஜ், மாநில முதன்மை ஆலோசகா் ஜெயபிரகாஷ், மாநில துணைத் தலைவா் வி.கே.ஆா்.சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ராணி மங்கம்மாள் ஆட்சியின் போது, விளையாட்டுத் திடலாக இருந்த மதுரை தமுக்கம் மைதானத்தில் தற்போது கட்டப்பட்டுள்ள மதுரை மாநாட்டு மையத்துக்கு, அவரது பெயரை சூட்ட வேண்டும், மேலும், அரண்மனையாக இருந்த காந்தி நினைவு அருங்காட்சியக நுழைவு வாயிலில் ராணி மங்கம்மாள் பெயரில் அலங்கார வளைவும், அவரது உருவச் சிலையும் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT

உண்ணாவிரதத்தில், மாநில துணைத் தலைவா்கள் கே. அழகிரிசாமி, வி.துரைசாமி, மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலா் வி. ஜெய்சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, மாநிலச் செயலா் சிட்கோ ஏ. சீனிவாசன் வரவேற்றாா். மாநில அமைப்புச் செயலா் எஸ். செல்லப்பாண்டியன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT