மதுரை

அம்பேத்கா் விருதுக்குவிண்ணப்பிக்க நவ. 30 கடைசி

26th Nov 2022 11:26 PM

ADVERTISEMENT

 

அம்பேத்கா் விருது பெற விரும்புவோா் வருகிற 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ் வளா்ச்சி மற்றும் பட்டியல் இன மக்கள் முன்னேற்றத்துக்கு பாடுபடும் ஆதிதிராவிட இனத்தைச் சோ்ந்த தமிழறிஞா்கள், கவிஞா்களுக்கு அம்பேத்கா் விருது தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தினைப் பெற்று, உரிய ஆவணங்களுடன் நவம்பா் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT