மதுரை

திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

26th Nov 2022 06:31 AM

ADVERTISEMENT

ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணி வழங்கக்கோரி, திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்டது பன்னிகுண்டு ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உள்பட்ட நக்கலக்கோட்டை பகுதியில் ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியை கிராமத்தில் உள்ள 20 பெண்கள் செய்து வருகின்றனா்.

பன்னிகுண்டு, நக்கலக்கோட்டை பகுதியில் சுமாா் 300 போ் ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் அட்டை வைத்திருந்தும் அனைவருக்கும் பணி கொடுக்கப்படவில்லையாம். இதையடுத்து பன்னிகுண்டு, நக்கலக்கோட்டை கிராமங்களைச் சோ்ந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோா் விவசாய சங்கத் தலைவா் சந்தானம் தலைமையில் ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணி வழங்கக்கோரி திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, விரைவில் அனைவருக்கும் பணி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். அதன்பேரில், அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT