மதுரை மாநகராட்சிக்குள்பட்ட விளாங்குடி காமாட்சியம்மன் கோயில் மந்தை வளாகத்தில் பாரம்பரிய மரக்கன்றுகள் நடும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
தானம் அறக்கட்டளை, மதுரை கிரீன் அமைப்பு, ஹெச்.சி.எல். பவுண்டேஷன் ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி உறுப்பினா் நாகஜோதி சித்தன் தலைமை வகித்து, மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடக்கி வைத்தாா்.
இதையடுத்து, எத்தோடியா, நாட்டு வாகை, கடம்பம், மருதம், இலுப்பை, அத்தி, ஏளிலம்பாலை, மந்தாரை, வேங்கை ஆகிய மரக்கன்றுகள் நடப்பட்டன. விளாங்குடி பகுதியைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் இப்பணியில் பங்கேற்றனா்.
சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்குரைஞா் மனோகா், மதுரை கிரீன் அமைப்பு ஒருங்கிணைப்பாளா் என். சிதம்பரம், தானம் அறக்கட்டளையின் திட்ட மேலாளா் முனிராம் சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விளாங்குடி காமாட்சியம்மன் கோயில் மந்தை, அதன் சுற்றுப் பகுதிகளில் 200 மரக்கன்றுகள் நடத்திட்டமிடப்பட்டு இப்பணி நடைபெற்றது.